Events
ஓவியப்போட்டி - 2024
SimpliCity · 16 May 2024

கருத்தா ஓவியம் வரைங்க... கலக்கலான பரிசை அள்ளுங்க..
கோவையில் இருந்து செயல்பட்டு வரும் தாய்மை அறக்கட்டளையானது "இலவச நீத்தார் சேவை" கல்வி உதவி, மருத்துவ உதவி போன்று பல்வேறு சமூக பணிகளை 8 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறது.உலக புகையிலை ஒழிப்பு தினம்(மே 31) மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம்(ஜூன் 5) ஆகியவற்றை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது . அந்த வகையில் எதிர்வரும் 26/5/2024 ஞாயிறு அன்று கோவை காமராஜர் சாலையில் அமைந்துள்ள NG ராமசாமி நினைவு உயர்நிலை பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது.
ஓவியப்போட்டிக்கான தலைப்பு.. 1)புகையிலை ஒழிப்போம்
2)சுற்றுச்சூழல் பாதுகாப்போம்
3)அழிந்து வரும் தமிழக பாரம்பரிய கலைகள்..
என்ற தலைப்பு சார்ந்து ஓவியம் வரைய வேண்டும்.
கோவையை மற்றும் கோவையை சுற்றியுள்ள கிராமப்புறத்தை சேர்ந்த 1 வகுப்பு முதல் 12 வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
மாணவர்களுக்கு ஓவியம் வரைய தாள் (சார்ட் பேப்பர் அளவில் 1/4 பங்கு or 35 cms x 28 cms)அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும்.
ஓவியம் வரைய கால அவகாசம் 1 மணி நேரம் மட்டுமே. போட்டியில் பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான விலையில்லா பரிசுகள் காத்திருக்கிறது.
மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற முயற்சி தொடர்ந்து 4 வருடங்களாக தாய்மை அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது.
ஓவிய போட்டி நடைபெறும் நேரத்தில் பெற்றோர்களுக்கு "பெற்றோர்கள் இன்னொரு நண்பர்கள்" என்ற தலைப்பில் அறிஞர்களின் சுவையான பேச்சும், பெற்றோர் -உளவியல் நிபுணர்களின் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது.
நிகழ்வு காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெறும்.
குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு இதுவொரு சிறப்பான பல்சுவை நிகழ்வாக இருக்கும். அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறது தாய்மை அறக்கட்டளை.
நிகழ்வு குறித்து அறிந்திட 9159158155,9442531460,8531077048,
9698485937